என்னைப்பற்றி (About Me)

 வணக்கம்!!!

என் பெயர் சுரேஷ்குமார், நான் ஒரு B.Com பட்டதாரி. தற்போது நான் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன்.


முதலீட்டில் ஆர்வம்:

நான் என்னுடைய கல்லூரிக்காலத்தில் தான் என்னுடைய டிமேட் (Demat) கணக்கை உருவாக்கினேன். சும்மா இருக்கும் நேரத்தில் ஏதாவது பணம் பண்ணவேண்டும் என்னும் எண்ணம் தான் என்னை டிமேட் கணக்கை உருவாக்கவைத்தது. அன்று முதல் என்னுடைய முதலீட்டு பயணம் தொடங்கியது என்று கூறலாம். ஆரம்ப காலத்தில், என்னுடைய பொழுதுபோக்கான நேரம் முழுவதும் தினப்பங்கு வர்த்தகத்தில் (Intraday Trading) தான் இருந்தது. அதன்மூலம் நான் லாபமும், நஷ்டமும் செய்து வந்தேன். சொல்லபோனால்  நஷ்டம் தான் அதிகம் வந்தது, கூடவே மன அழுத்தமும், விட்ட பணத்தை எடுக்கவேண்டுமென்ற பதற்றமும் தொற்றிக்கொண்டது. அதான் பிறகு என்னுடைய சிந்தனை முதலீடு பக்கம் சென்றது. அதன்படி நான் சிறிது சிறிதாக பணத்தை ஏதாவது பங்குகளில் முதலீடு செய்துவந்தேன். 

பிறகு பொழுதுபோக்கான நேரத்தில் படிக்க ஆரம்பித்தேன். அதனால் கிடைக்கும் நேரத்தில் புத்தகம், செய்தித்தாள், வாரஇதழ் என பலவற்றை படித்தேன். அதிலும் தனிப்பட்ட நிதி (Personal Finance) சம்பந்தமான செய்தி என்றால் என்னுடைய  ஆர்வம் மிகுதி ஆகிவிடும்.  அப்படி நிறைய  தனிப்பட்ட நிதி, முதலீடு உத்திகள் பற்றி படிக்க படிக்க என்னுடைய முதலீட்டு அறிவு விசாலமானது. 

அந்த முதலீட்டு அறிவு என்னுடைய  முதலீட்டு ஆர்வத்தை மேம்படுத்தி சிறந்த வழிகளை எல்லாம் உருவாக்கியது. தற்போது  என் முதலீட்டு பயணத்தில் நான் மூன்றாம் ஆண்டு (2026) கடந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 


ஏன் இந்த "Calm Investing?"

தற்போது  ஏன் இந்த "Calm Investing" என்ற இணையதளத்தை உருவாக்கினேன் என்றால் அதற்கு மூலக்காரணம், என்னுடைய முதலீட்டு அறிவு, முதலீட்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த வகையிலாவது கைக்கொடுக்கவேண்டும் என்பதால் தான்.  அந்த வகையில் நான் எனக்கு தெரிந்த & அறிந்த முதலீட்டு, செல்வத்தை உருவாக்குதல் (Wealth Building), தனிப்பட்ட நிதி (Personal Finance) பற்றிய தகவல்களையும் & என்னுடைய அனுபவத்தையும் மிகவும் எளிய முறையில் எடுத்து கூறுவதற்காகவும் உருவாக்கபட்ட ஒரு இணையம் தான் "Calm Investing". 

இந்த இணையத்தில் உங்களுக்கு தெரிந்த செய்திகளை, கருத்துகளை மற்றும் குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள Comments அல்லது Contact Us பக்கங்களை பயன்படுத்தவும். 


நன்றி!!!


குறிப்பு: 

நான் செபியால் (Security Exchange Board of India - SEBI) அங்கீகரிக்கபட்ட நிதி ஆலோசகர் அல்லது பங்குசந்தை நிபுணர் கிடையாது. இந்த இணையதளத்தில் பகிரப்படும் கட்டுரைகள், தகவல்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் கல்வி மற்றும்  விழிப்புணர்வு நோக்கத்திற்காக (Educational Purpose) மட்டுமே வழங்கபடுகின்றன. இவற்றை தனிப்பட்ட நிதி அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பங்குசந்தை மற்றும்  ம்யூச்சுவல் ஃபண்டுகளில்  (Mutual Fund)  செய்யபடும் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.  

எந்தவொரு  முதலீட்டு  முடிவை எடுப்பதற்க்கு முன்பாக தயவுசெய்து உங்கள் சொந்த ஆராய்ச்சியோ (Own Research) அல்லது செபியால் (SEBI) அங்கீகரிக்கபட்ட நிதி ஆலோசகர்களிடமோ கலந்தாலோசிக்கவும்.  உங்கள் முதலீடுகளால் ஏற்படும் எந்தவொரு நிதி இழப்பிற்கும் அல்லது லாப நட்டதிற்க்கும் நான் அல்லது இந்த இணையம் பொறுப்பல்ல. 

No comments:

Post a Comment